"பூமியை கேட்டா வான்முகில் தூவும்
பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்
வீதியை கேட்டா தென்றலும் வீசும்
சாதியை கேட்டா காதலும் தோன்றும்"
கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை சற்று facebook ல் எழுதி நண்பர்களின் கவனத்தை பெறலாம் என்று நேற்று அப்படி செய்து இருந்தேன். நினைத்து போலவே நான் காதலில் விழுந்து விட்டதாக நட்பு வட்டம் சற்று பரபரத்தது. ஆனால் அதில் இரண்டு நண்பர்கள் இந்த பாடலின் சாராம்சத்தை எடுத்து கொண்டு விவாதித்தது என்னை மீண்டும் ஒரு முறை இந்த விஷயத்தை பற்றி யோசிக்க வைத்தது.
சாதி
இந்த இரண்டெழுத்து நோய் கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து முன் தோன்றிய ஒன்றோ என்னும் அளவு வேர்விட்டு வளர்ந்து இருக்கிறது. ஒருவன் மதம் மாறலாம், நாடு மாறலாம், ஏன் பாலினம் கூட மாறலாம் அனால் பாழாய் போன சாதி மாற முடியாது. எத்தனை சாதிகள் அந்த சாதிகளுள் எத்தனை பிரிவுகள். அடேயப்பா. மனிதர்களை எப்படி எல்லாம் கூறு போட்டிருக்கிறார்கள். கலப்பு திருமணம் சினிமாக்களில் மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. மற்றபடி நிஜத்தில் சாதீயமே மிஞ்சுகிறது. சாதியை ஒழிக்க புறப்பட்டோர் ஏன் "நான் எந்த சாதியையும் சார்ந்தவன் இல்லை" என்று கூற வழிமுறைகள் ஏற்படுத்தவில்லை? அப்படி கூறுபவர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்க கூடாது? அப்படி செய்தால் சாதீயம் ஒழிய வழி பிறக்காதா? இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வரை "சாதியை கேட்காவிடில் காதல் தோன்றாமல் இருப்பதே நன்று"
No comments:
Post a Comment